×

புதிய கமிஷனர் அலுவலக கட்டிடத்தை டிஜிபி ஆய்வு

 

திருப்பூர், ஜன.30: திருப்பூர்-அவிநாசி ரோடு, குமார்நகர், அங்கேரிபாளையம் ரோடு சந்திப்பில் உள்ள பழைய ஆர்டிஓ அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்ட கடந்த 2021ம் ஆண்டு இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த ஆண்டே ஜூன் மாதம் இதற்கான திட்டம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு பெற அரசுக்கு அனுப்பப்பட்டது.

கமிஷனர் அலுவலகம் கட்ட ரூ.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு 2.24 ஏக்கரில் அமைய உள்ள புதிய கமிஷனர் அலுவலக கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. 5 மாடி தளத்துடன் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதற்காக முதல்கட்டமாக ரூ.1.25 கோடி ஒதுக்கப்பட்டு அங்கிருந்த பழைய கட்டிடங்கள் அகற்றும் பணி, வரைபடம் உள்ளிட்ட பணிகள் நடந்தது.

தற்போது அந்த கமிஷனர் அலுவலக கட்டிட கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த கமிஷனர் அலுவலக கட்டிடத்தை காவலர் வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். மாநகர போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபிநபு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post புதிய கமிஷனர் அலுவலக கட்டிடத்தை டிஜிபி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : DGP ,Tirupur ,Commissioner ,RTO ,Tirupur-Avinasi Road, Kumarnagar, Angaripalayam Road ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநில டிஜிபி நீக்கம்: தேர்தல் ஆணையம் உத்தரவு